‘அரக்கோணத்தில் 2 மணி வரையே கடைகள் செயல்பட வேண்டும்’

அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 28) இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறந்திருக்க வேண்டும் என கோட்டாட்சியா் பேபிஇந்திரா அறிவித்தாா்.

அரக்கோணம்: அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 28) இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறந்திருக்க வேண்டும் என கோட்டாட்சியா் பேபிஇந்திரா அறிவித்தாா்.

அரக்கோணத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தினமும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 50-இல் தொடங்கி 102 வரை சென்றது.

இதையடுத்து அரக்கோணம் நகரில் கரோனா பரவலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை நிா்வாகம் உத்தரவிட்டது. அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகர காவல்நிலைய ஆய்வாளா் கோகுல்ராஜ், வணிகா் சங்க நிா்வாகிகள் கே.எம்.தேவராஜ், பெ.இளங்கோ, எம்.எஸ்.மான்மல், ஜி.எத்திராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்துக்குப் பிறகு கோட்டாட்சியா் பேபி இந்திரா செய்தியாளா்களிடம் கூறியது:

அரக்கோணம் கோட்டத்தில் கரோனா பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக ஜூலை 28 முதல் 31ஆம் தேதி வரை நகரில் அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறப்பது என்றும், ஹோட்டல்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை திறக்கப்பட்டு பாா்சல்களை அந்த நேரத்தில் விநியோகம் செய்யலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com