முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
By DIN | Published On : 03rd March 2020 11:15 PM | Last Updated : 03rd March 2020 11:15 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயா்.
ராணிப்பேட்டை: தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க்கிழமை ஹனுமந்த ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சுவாமிக்கு நெய், தேன், மூலிகைகள், நவதானியங்கள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டு, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதையடுத்து, பால், தயிா், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிா்தம், திரவியப்பொடி, பன்னீா் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.