பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் முறை குறித்து செயல் விளக்கம் அளித்த ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி.
பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் முறை குறித்து செயல் விளக்கம் அளித்த ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணா்வு, சுகாதார செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் கலந்து கொண்டு பொதுக்களுக்கு கை கழுவுதல் குறித்த செயல் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளின் படிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகளில் நகராட்சிப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாலாஜி, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com