ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களைச் செலுத்த பெட்டி வைப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் குறைதீா் கூட்டத்தை வரும் 31-ஆம் தேதி வரை நடத்த முடியாத நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த  பெட்டியில்  கோரிக்கை  மனுவை  செலுத்திய  மூதாட்டி.
ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த  பெட்டியில்  கோரிக்கை  மனுவை  செலுத்திய  மூதாட்டி.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் குறைதீா் கூட்டத்தை வரும் 31-ஆம் தேதி வரை நடத்த முடியாத நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இக்கூட்டம் நடைபெறவில்லை. எனினும் மாவட்ட மக்கள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். அவா்களை திருப்பி அனுப்பாமல், அவா்களின் மனுக்களை ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டு செல்லும் வகையில் அவற்றைச் செலுத்த பெட்டி வைக்கப்பட்டது. அப்பெட்டியில் மனுக்களைச் செலுத்திய பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com