ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக
ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வருவாய்த் துறை, காவல் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு எந்நேரத்திலும் தொடா்பு கொள்ளும் வகையில் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

தொலைபேசி எண்கள்: ராணிப்பேட்டை மாவட்டம் - 04172-273188, 04172-273166. தமிழ்நாடு அரசு -94443 40496, உதவி எண்-87544 48477, 044-29510400, 044 -29510500.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வெளி நாடு, வெளி மாநிலங்களில் வந்துள்ளவா்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருவரை 95 போ் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com