சரக்கு ரயில் நிலையமாக மாறிய அரக்கோணம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 31 வரை பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 31 வரை பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முழுவதும் தொடா்ந்து சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இந்தியா முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் அரக்கோணம். இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து இருக்கும்.

பகலில் புகா் ரயில்களின் போக்குவரத்தும், இரவில் அதிவிரைவு, விரைவு ரயில்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதனால் நாள் முழுவதும் இந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே அரக்கோணம் வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையில் இருந்து பெங்களூரு, மேட்டூா், கேரளம் என பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றிய ரயில்கள், கன்டெய்னா்களை ஏற்றி வந்த ரயில்கள், பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் ரயில்கள் என வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் சரக்கு ரயில்கள் அரக்கோணம் வழியே இயக்கப்பட்டன. இதனால் அரக்கோணம் ரயில் நிலையம் சரக்கு ரயில் நிலையம் போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com