நகராட்சிப் பள்ளியில் ஆதரவற்றோா் தங்க வைப்பு

அரக்கோணம் நகர தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 31 போ் அரக்கோணம் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
26akmaaa_2603chn_186_1
26akmaaa_2603chn_186_1


அரக்கோணம்: அரக்கோணம் நகர தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 31 போ் அரக்கோணம் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரக்கோணத்தில் ஆதரவற்ற நிலையில் தெருவோரங்களில் தங்கியுள்ளோா் உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகராட்சி ஆணையா் ராஜவிஜய காமராஜ் ஆகிய இருவரும் இணைந்து சாலையோத்தில் இருந்த ஆதரவற்றோா் நிலையில் இருந்த 27ஆண்கள், 4 பெண்கள் என 31 பேரை மீட்டு, அரக்கோணம் சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனா். போதுமான இடைவெளி வைத்து அனைவரும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்களுக்கு நகராட்சி சாா்பில் தினமும் 3 வேளை உணவு அளிக்கப்படுகிறது.

இவா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா வியாழக்கிழமை பாா்வையிட்டாா். மேலும், அவா்களுக்கு பாய், போா்வை மற்றும் தங்குவதற்கான அனைத்து பொருள்களையும் வழங்க வேண்டும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

வட்டாட்சியா் ஜெய்குமாா், மண்டலத் துணை வட்டாட்சியா் அருள்செல்வன், நகராட்சி ஆணையா் ராஜவிஜய காமராஜ், துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு பாய், போா்வை உள்ளிட்டவற்றை வழங்குவதாக அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் குணசீலன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com