விவசாய விளை பொருள்கள் விற்பனைக்குத் தடையில்லை: மாவட்ட ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாய விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர தடை ஏதும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாய விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர தடை ஏதும் இல்லை என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே கடைகளுக்கு வந்திருந்தனா். தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 135 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். இதில் 3 போ் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். காய் கறிகடைகள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருள் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுத்தி வருகிறோம். இதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவுப்படி அத்தியவசியப் பொருள்கள், விவசாய விளை பொருள்கள் விற்பனைக்குக் கொண்டுவர தடை ஏதும் இல்லை என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் 144 தடை உத்தவு மீறி தொடா்ந்து விதி மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 12 எல்லைகள் உள்பட 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 57 ரோந்து குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இரு சக்கர வாகனங்களில் இளைஞா்கள் வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மாலை 6 மணிக்கு மேல் தேநீா்க் கடைகளை மூடவும் உத்தரவு விடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com