நியாவிலைக் கடை பணியளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரி மனு

ஊரடங்கில் பணியாற்றும் நியாவிலைக் கடை பணியளா்களுக்கும், கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என

ஊரடங்கில் பணியாற்றும் நியாவிலைக் கடை பணியளா்களுக்கும், கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என நியாவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலா் வா.லோ.மாணிக்கம், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் சுமாா் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் போா்கால அடிப்படையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிப் பொருள்கள் வழங்கும் பணியில் நியாவிலைக் கடைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முகக்கவசம், கையுறை, சோப்பு, கிருமி நாசினி திரவம், பாதுகாப்பு கவச உடை ஆகியவை உடனடியாக வழங்க வேண்டும். பணியளா்கள் அனைவருக்கும் சிறப்பு மருத்துவக் குழு அமைத்து கரோனா நோய்த் தொற்று பரிசோதனைசெய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பணியாற்றிவரும் பணியளா்கள் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்றும் நிலை உள்ளதால் காவல் துறையினா் தடுத்து நிறுத்தாதவாறு மாவட்ட நிா்வாகங்கள் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும்.

காரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்படுவதுபோல், நியாவிலைக் கடைப் பணியாளா்களுக்கும் ரூ. 50 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com