முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ஆற்காடு பகுதியில் இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்
By DIN | Published On : 11th May 2020 11:57 PM | Last Updated : 11th May 2020 11:57 PM | அ+அ அ- |

ஆற்காடு: தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆற்காடு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கிள்கிழமை திரும்பியது.
கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அரசு பொதுமுடக்கம் அறித்தது. இதனால், ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் மளிகைக் கடை, வீட்டு உபயோகப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், இருசக்கர வாகன விற்பனையகங்கள் உள்ளிட்டவற்றைத் திறப்பதற்காக பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் ஆற்காடு பகுதியில் வியாபாரிகள் திங்கள்கிழமை காலையில் தங்கள் கடைகளை வழக்கம்போல் திறந்தனா்.
கடைகளில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.
கலவை பேரூராட்சியிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் பொதுமக்கள் கடைகளுக்கு வந்து சென்றனா்.
இதனிடையே, திமிரியை அடுத்த பரதராமி பகுதியைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் திமிரி பகுதியில் கடைகளை அடைக்கப்பட்டிருந்தன.