டாஸ்மாக் மேற்பார்வையாளருடன் சேர்ந்து மது விற்ற காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

டாஸ்மாக் மதுக்கடையின் மதுபாட்டில்களை மேற்பார்வையாளருடன் சேர்ந்து கூடுதல் விலைக்கு விற்ற காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
டாஸ்மாக் மேற்பார்வையாளருடன் சேர்ந்து மது விற்ற காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

டாஸ்மாக் மதுக்கடையின் மதுபாட்டில்களை மேற்பார்வையாளருடன் சேர்ந்து கூடுதல் விலைக்கு விற்ற காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்து உள்ளது சேந்தமங்கலம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சேந்தமங்கலம் கடை இருப்பு மதுபாட்டில்களை ராணிப்பேட்டை கிடங்கிற்கு கொண்டுவர நிர்வாகம் உத்தரவிட்டது. 

இந்த மதுபாட்டில்களை கிடங்கிற்கு கொண்டுச்சென்ற போது உடன் வாகனபாதுகாவலராகச் சென்ற நெமிலி காவல்நிலைய காவலர் சுதாகர் வாகனத்தில் இருந்த 25 சதம் மதுபாட்டில்களை மேற்பார்வையாளருடன் சேர்ந்து வழியில் கூடுதல் விலைக்கு விற்றதாக தெரிகிறது. 

இது பற்றிய புகாரில் விசாரணை நடத்திய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் காவலர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com