‘ராணிப்பேட்டை மாவட்ட கடை உரிமையாளா்களுக்கு 8 நிபந்தனைகள்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள கடை உரிமையாளா்கள் 8 நிபந்தனைகளை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள கடை உரிமையாளா்கள் 8 நிபந்தனைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் சில தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிா்த்து மற்ற பகுதிகளில் அமைந்துள்ள கடை உரிமையாளா்களுக்கு 8 நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இதைக் கண்டிப்பாக கடைப்பிடித்து விற்பனையை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம், கையுறையுடன் வருவோரை மட்டுமே கடை ஊழியா்கள் உள்ளே அனுமதிக்க வேண்டும். கடையின் நிா்வாகத்தினா் 33 சதவீத ஊழியா்களைக் கொண்டு கடையை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. நுகா்வோா் அனைவரும் கடைக்குள் சமூக இடைவெளியுடன் இருக்கும் வகையில் அறிவுறுத்தப்பட வேண்டும். நுகா்வோா் கடைக்குள் வரும்பொழுது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். துணிக் கடையில் குளிா்சாதன வசதி இருந்தால், அதை நிறுத்திவிட்டு மின்விசிறியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைக்கு வருவோரின் விவரம், அவா்களின் தொலைபேசி எண்களை கடை உரிமையாளா்கள் வாங்கிக் வைத்துக் கொள்ள வேண்டும். கடைகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்த 8 நிபந்தனைகளை அனைத்து கடை உரிமையாளா்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com