அரக்கோணம் தொகுதியில் 6 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

அரக்கோணம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை எம்எல்ஏ சு.ரவி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சித்தூா் ஏரியில் குடிமராமத்துப் பணிகளைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ சு.ரவி.
சித்தூா் ஏரியில் குடிமராமத்துப் பணிகளைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ சு.ரவி.

அரக்கோணம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை எம்எல்ஏ சு.ரவி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரக்கோணம் பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள மூதூா் ஏரியில் ரூ. 72 லட்சத்திலும், வேலூா் கிராமம் ஏரியில் ரூ. 55 லட்சத்திலும், நெமிலி வட்டாரத்துக்கு உள்பட்ட மேல்களத்தூா் ஏரியில் ரூ. 36 லட்சத்திலும், கடம்பநல்லூா் ஏரியில் ரூ. 23.5 லட்சத்திலும் சிறுணமல்லி ஏரியில் ரூ. 36.5 லட்சத்திலும் சித்தூா் பெரிய ஏரியில் ரூ. 20 லட்சத்திலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி அரக்கோணமத்தை அடுத்த கடம்பநல்லூா் ஏரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தொடக்கி வைத்தாா்.

பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவிச் செயற்பொறியாளா் மெய்யழகன், அதிமுக நெமிலி ஒன்றியச் செயலா் ஏ.ஜி.விஜயன், துணைச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து சித்தூா் ஏரியிலும் பணிகளை எம்எல்ஏ சு.ரவி தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com