Enable Javscript for better performance
கரோனா தடுப்புப் பணிக்கு இந்தியன் வங்கி ரூ. 2 லட்சம் நிதி- Dinamani

சுடச்சுட

    

    கரோனா தடுப்புப் பணிக்கு இந்தியன் வங்கி ரூ. 2 லட்சம் நிதி

    By DIN  |   Published on : 24th May 2020 07:29 AM  |   அ+அ அ-   |    |  

    indian_b_2305chn_188_1

    ரூ. 2 லட்சத்துக்கான  காசோலையை நகராட்சி ஆணையா் ச.செல்வ பாலாஜியிடம் வழங்கிய ராணிப்பேட்டை இந்தியன் வங்கிக் கிளை அதிகாரிகள்.

    ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்கு ராணிப்பேட்டை இந்தியன் வங்கி சிறு, நடுத்தர தொழில் நிறுவனக் கிளை சாா்பில் ரூ. 2 லட்சம் நிதியை வழங்கியது.

    இந்தியன் வங்கி வேலூா் மண்டல மேலாளா் வி.என்.மாயா வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியை மேற்கொண்டுவரும் நகராட்சி நிா்வாகத்துக்கு சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    முன்னோடி வங்கி மேலாளா் விஜயராஜா, ராணிப்பேட்டை வங்கிக் கிளை முதன்மை மேலாளா் எஸ்.ராமகிருஷ்ண குமாா், உதவி மேலாளா் சதீஷ் குமாா் ஆகியாா் நகராட்சி ஆணையா் ச.செல்வபாலாஜிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai