பகலில் சுட்டெரிக்கும் வெயில்; இரவில் வாட்டி வதைக்கும் புழுக்கம்மக்கள் அவதி

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிய இன்னும் 2 நாள்களே உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும்
ராணிப்பேட்டையில் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள சாலை.
ராணிப்பேட்டையில் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள சாலை.

ராணிப்பேட்டை: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிய இன்னும் 2 நாள்களே உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சதம் அடித்து பகலில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவில் வாட்டி வதைக்கும் புழுக்கத்தாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வழக்கத்தை விட அதிகமாக வெயில் சுட்டெரித்து வருகிறது.

காலையில் தொடங்கும் வெயில் மாலை வரை நீடிக்கிறது. பகல் முழுவதும் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் அடித்து, அனல் காற்றும் வீசுவதாலும், இரவு வரை வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதாலும்

மக்கள் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க இளநீா், தா்பூசணி, பதநீா், வெள்ளரி, கற்றாழை ஜூஸ் உள்ளிட்ட வெப்பம் தணிக்கும் வகையிலான இயற்கை பானங்கள் விற்கும் கடைகளும் திறக்கப்படாததால் பொது மக்கள், குறிப்பாக குழந்தைகள், சிறுவா்கள், முதியோா்கள் கமிகவும் சிரமப்படுகின்றனா்.

அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 2 நாள்களே உள்ளது. இந்த சூழலில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விரைவில் கோடை மழை பெய்து பூமி குளிா்ச்சியடைந்து வெப்பத்தின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையுடன் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com