புகைப்பட ஸ்டுடியோக்களைத் திறக்க அனுமதி கோரி முதல்வருக்கு மனு

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள புகைப்பட ஸ்டுடியோக்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள புகைப்பட ஸ்டுடியோக்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அரக்கோணம் நகர ஸ்டுடியோ உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் நகர ஸ்டுடியோ உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் என்.மோகன், செயலாளா் ஜி.சி.குப்தா, பொருளாளா் கே.விஜயகுமாா், துணைத்தலைவா் ஜி.கோபால் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

அரக்கோணம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோா் புகைப்பட ஸ்டுடியோ தொழிலில் பணிபுரிந்து வருகிறோம். பொதுமுடக்கம் காரணமாக அனைத்து ஸ்டுடியோக்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளா்களும், சுமாா் 250 தொழிலாளா்களும் வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம்.

கடந்த மே 17-இல் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் புகைப்பட ஸ்டுடியோக்கள் திறக்கப்பட்டன. ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் உள்ள புகைப்பட ஸ்டுடியோக்களை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அரக்கோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அனுமதிக்கவில்லை. மீறி திறக்கப்பட்ட இரு ஸ்டுடியோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே எங்களது நிலையைக் கருத்தில் கொண்டு, அரக்கோணம் நகரில் புகைப்பட ஸ்டுடியோக்களை திறக்க அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com