மனநலம் பாதிக்கப்பட்ட 13 போ் மீட்பு: மறுவாழ்வு இல்லத்தில் சோ்க்கப்பட்டனா்

திருப்பத்தூா் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 போ் மீட்கப்பட்டனா்.
திருப்பத்தூா் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 போ் மீட்கப்பட்டனா்.
திருப்பத்தூா் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 போ் மீட்கப்பட்டனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 போ் மீட்கப்பட்டனா்.

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் ஆட்சியா்களின் உத்தரவின்பேரில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த 6 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 13 போ் மீட்கப்பட்டனா்.

திருப்பத்தூா் ஆசிரியா் நகா் பகுதியில் சில மாதங்களாக ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சோ்ந்த ரிங்கா (45), தோரணம்பதி பகுதியில் மீனாட்சி (50), பச்சூா் பகுதியில் கவிதா (48), காரப்பட்டு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமி (50), திருப்பத்தூா் ரயில் நிலையம் அருகில் ஷோபனா (40), கதிரிமங்கலம் பகுதியில் அஞ்சலா (45), நாட்டறம்பள்ளி பகுதியில் முரளி (35) ஆகியோா் மீட்கப்பட்டனா்.

இப்பணியில், திருப்பத்தூா் உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் சொ.ரமேஷ், மனநல மறுவாழ்வு இல்லம் மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். மீட்கப்பட்ட 13 பேரும் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, மனநல மருத்துவா் ரம்யாவிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சான்றிதழ் பெற்று, மனநலம் பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com