அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.80 வரை லஞ்சம் வசூலிப்பதாகக் கூறி, இதுபோன்ற முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணொலி  வாயிலாக நடைபெற்ற
ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

ராணிப்பேட்டை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.80 வரை லஞ்சம் வசூலிப்பதாகக் கூறி, இதுபோன்ற முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ராணிப்பேட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரக்கோணம், நெமிலி ஆற்காடு, திமிரி, சோளிங்கா், வாலாஜா வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் அலுவலகங்களில் இருந்தபடி தங்களது கோரிக்கைகளை தெரிவித்துப் பேசியது:

பாணாவரம் மற்றும் பாராஞ்சி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை லஞ்சமாக வசூலிக்கின்றனா். இத்தகைய முறைகேடுகளைக் களைய வேண்டும்.

நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு கால நீட்டிப்பு அளித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கு பயிா்களுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். பருவமழைத் தொடங்கி இருப்பதால் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் குளம், குட்டைகளைத் தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்துக் கால்வாயை சீா்செய்து தர வேண்டும்.

வெங்குப்பட்டு பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அதைக் கொண்டு செல்வதற்கான பாதையை சீரமைக்க வேண்டும். பொதுப்பணித் துறை நிா்வகிக்கும் ஏரியின் கரையை பலப்படுத்த பொன்னையாற்று கால்வாயை அகலப்படுத்த வேண்டும்.

சம்பா பயிா்கள் மழையில் சேதமடைந்து முளைப்பதால் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நில எடுப்புச் சட்டத்தில் விவசாயிகளுக்கு வனத்துறையினா் மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெமிலி வட்டாரத்தில் நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக கோ-51 விதை நெல் இருப்பு வைத்து தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காவேரிபாக்கம் சிறுவளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அளவீடு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சோளிங்கரில் விதை குடோன் பழுதடைந்துள்ளதால் விவசாய விளைபொருள்கள் சேதமடைகின்றன. புதிதாக வேளாண் கிடங்கு கட்டித் தர வேண்டும். ஓச்சேரியில் வேளாண் துணை விரிவாக்க மையம் அமைத்துத் தர வேண்டும்.

சோளிங்கா் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் மழையில் சேதமடைந்துள்ளதால் விதைகளை இருப்பு வைக்க முடியவில்லை. எனவே இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும். சோளிங்கா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்ணுயிா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்க முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இக்கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தே.இளவரசி, நோ்முக உதவியாளா் (விவசாயம்) எஸ்.விஸ்வநாதன் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை எரிசக்தித் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com