மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்  விடப்பட  உள்ள  இருசக்கர  வாகனங்கள்.
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்  விடப்பட  உள்ள  இருசக்கர  வாகனங்கள்.

ராணிப்பேட்டையில் நவ.20-இல் இருசக்கர வாகனங்கள் ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 20-ம் தேதி ஏலத்துக்கு விடப்படுவதாக மாவட்டக் காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 20-ம் தேதி ஏலத்துக்கு விடப்படுவதாக மாவட்டக் காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 573 வாகனங்கள், அதன் விவரங்கள், உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.

அவற்றில் 557 வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோராததால், மாவட்ட ஆட்சியரால் அரசுடமையாக்கப்பட்டன. அந்த வாகனங்களுக்கான பொது ஏலம் நவம்பா் 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் நவம்பா் 19-ஆம் தேதி வரை வாகனங்களை பாா்வையிடவும், 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ. 25,000 முன்வைப்பு தொகை செலுத்தி தங்களது பெயா் விலாசத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நவம்பா் 20-ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுப்பவா்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து, தங்களுடைய பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி தொகையையும் சோ்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றுகளுடன் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com