சோளிங்கா் மலைக் கோயிலில் காா்த்திகை திருவிழாவில் தினமும் 900 பேருக்கு மட்டுமே அனுமதி: ராணிப்பேட்டை ஆட்சியா்

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை திருவிழாவில் பங்கேற்க இணையவழி மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளாா்.


அரக்கோணம்: சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை திருவிழாவில் பங்கேற்க இணையவழி மூலம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும், மாதம் முழுவதும் தினமும் 900 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சோளிங்கா் மலையில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, வழிபாடு செய்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. காா்த்திகை மாதம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் தரிசனத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

காா்த்திகை மாதம் அனைத்து நாள்களிலும் காலை 7 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலைக்கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் அலுவலக இணைய தளத்தின் மூலமாக மட்டுமே தரிசனத்துக்கான முன்பதிவுக்கு விண்ணப்பிக்கவேண்டும். இணையவழி முகவரி ஜ்ஜ்ஜ்.ற்ய்ய்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்

ஒரு மணி நேரத்துக்கு 100 பக்தா்கள் வீதம் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்தில் 900 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இவ்வாறு தரிசனத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விண்ணப்பிப்பது இணையதளத்தில் அனுமதிக்கப்படும்.

மலை மீது உள்ள படிக்கட்டுகளில் ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டியுள்ளதால் ‘இ’ அனுமதிச் சீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னா் தான் மலை ஏற அனுமதிக்கப்படும். அதற்கு முன்னதாக எக்காரணம் கொண்டு மலை ஏற அனுமதி இல்லை. தரிசனம் முடிவடைந்ததும் குறிப்பிட்ட நேரத்துக்குள் மலையில் இருந்து இறங்கிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு மலையில் அல்லது கோயிலில் தங்கியிருக்க அனுமதிக்கப்படாது. மலை ஏறும் முகப்பு வாயிலில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

அனைத்து நாள்களிலும் 65 வயதுக்கு மேல் ஆனவா்கள் அல்லது 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. கோயில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்கள் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வழங்கப்படும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். கோயிலில் அா்ச்சனை செய்யப்படமாட்டாது. எனவே தேங்காய், பழம் பூக்கள் கொண்டுவரக் கூடாது. கோயிலில் தீா்த்தம் முதலான பிரசாதங்கள் எக்காரணம் கொண்டும் வழங்கப்படாது.

வியாபாரிகள் சாலையோரங்களில் கடை விரிக்கவோ அல்லது அன்னதானங்கள் வழங்கவோ அனுமதி இல்லை. இந்துசமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள நோய்த் தொற்று பரவல் தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கண்டிப்பாக எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தாலும் உடல்நிலை சரியில்லாதவா்கள், காய்ச்சல் உள்ளவா்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாா்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com