சோளிங்கா் மலைக் கோயில் ரோப்காா் திட்டம்: பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் மலைக் கோயிலில் நடைபெற்று வரும் ரோப்காா் அமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட
காா்த்திகைப் பெருவிழாவை முன்னிட்டு சோளிங்கா் கோயில் மலைப் பாதையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பாா்வையிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.
காா்த்திகைப் பெருவிழாவை முன்னிட்டு சோளிங்கா் கோயில் மலைப் பாதையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பாா்வையிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.

சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் மலைக் கோயிலில் நடைபெற்று வரும் ரோப்காா் அமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்கோயிலில் தற்போது காா்த்திகைப் பெருவிழா தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்கும் இவ்விழாவில் நடப்பாண்டில் தினமும் 900 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பாா்வையிட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் வந்தாா். மலைப்பாதையில் நடந்து சென்று ஏற்பாடுகளை பாா்வையிட்ட அவா், அங்கு நடைபெற்று வரும் பிராகாரப் பணிகள் மற்றும் ரோப்காா் திட்டப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து ரோப்காா் திட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதை அறிந்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ரமணிக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா், ஒன்றிய ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சோளிங்கா் பேருராட்சி செயல் அலுவலா் ஆகியோரிடம் நிலுவையில் உள்ள திட்டப்பணி விவரங்களைக் கேட்டறிந்தாா். பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.

முன்னதாக சோளிங்கா் பேரூராட்சி கொண்டபாளையம் பகுதியில் உள்ள 8, 9, 10, 11 ஆகிய வாா்டுகளை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு குடிநீா் விநியோகம் சீராக நடைபெறுவதற்காக நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்ச்சிகளின்போது அவருடன் சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத், சோளிங்கா் வட்டாட்சியா் ரேவதி, சோளிங்கா் ஒன்றிய ஆணையா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி, பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜன், அதிமுக சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எல்.விஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com