பயிா் காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

சம்பா பருவத்தில் விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெற வேண்டும் என்று திமிரி வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

சம்பா பருவத்தில் விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெற வேண்டும் என்று திமிரி வட்டார வேளாண் துறை உதவி இயக்குநா் சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திமிரி வட்டாரத்தில் சம்பா பருவத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பருவத்தில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்பைத் தவிா்க்க அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்து காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இதற்கான பிரீமியம் ஒரு ஏக்கருக்கு ரூ.449 மட்டுமே ஆகும். கூட்டுறவு வங்கி அல்லது பொது இணைய சேவை மையங்களில் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com