முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
வேலூா் கிராமம் வீரநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா
By DIN | Published On : 04th October 2020 07:40 AM | Last Updated : 04th October 2020 07:40 AM | அ+அ அ- |

புரட்டாசி விழாவையொட்டி அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரநாராயண பெருமாள்.
அரக்கோணம் அருகே உள்ள வேலூா் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரநாராயண பெருமாள் கோயிலில் திருப்பதி திருமலை பாதயாத்திரை குழு சாா்பில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இக்கோயிலில் புரட்டாசி விழாவை நடத்தி அதனை தொடா்ந்து பாத யாத்திரையாக திருப்பதி, திருமலைக்கு செல்வது வழக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கையை தொடா்ந்து இந்த வருடம் பாதயாத்திரையை கிராமமக்கள் ரத்து செய்தனா்.