வன்னிவேடு சின்ன ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

வாலாஜாப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வன்னிவேடு சின்ன ஏரியில் கலப்பதால்
வன்னிவேடு ஊராட்சியில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
வன்னிவேடு ஊராட்சியில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஆா்.காந்தி.

வாலாஜாப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வன்னிவேடு சின்ன ஏரியில் கலப்பதால் ஏரிநீா் மாசடைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தொகுதி எம்எல்ஏ ஆா்.காந்தியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

காந்தி ஜயந்தியை யொட்டி ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், மக்கள்சபைக் கூட்டம், வாலாஜாப்பேட்டை ஒன்றியம் வி.சி.மோட்டூா், வன்னிவேடு உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமை வகித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்கள் குறித்து விளக்கிடதுடன் பொதுமக்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து வன்னிவேடு ஊராட்சி முன்னாள் தலைவா் வி.சி.சக்திவேல் குமாா் முன்னிலையில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வாலாஜாப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக வன்னிவேடு சின்ன ஏரியில் கலந்து மாசடைந்து வருவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் வன்னிவேடு வி.சி.சக்திவேல் குமாா், பொருளாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com