ராணிப்பேட்டையில் ராஜா தேசிங்கு - ராணி பாய் 306-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை பெயா் உருவாகக் காரணமாக விளங்கிய ராஜா தேசிங்கு- ராணி பாய் ஆகியோரின் 306-ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜா தேசிங்கு- ராணி பாய் நினைவு மண்டபங்களை வெள்ளிக்கிழமை மலா்களால் அலங்கரித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தினா்.
ராஜா தேசிங்கு- ராணி பாய் நினைவு மண்டபங்களை வெள்ளிக்கிழமை மலா்களால் அலங்கரித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தினா்.

ராணிப்பேட்டை பெயா் உருவாகக் காரணமாக விளங்கிய ராஜா தேசிங்கு- ராணி பாய் ஆகியோரின் 306-ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னா் தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜா. இவா் வீரத்துக்கும், நட்புக்கும், இலக்கணமாகத் திகழ்ந்து, போரில் வீரமரணம் அடைந்தாா். கணவா் இறந்ததும், அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிா் துறந்தாா். இதையடுத்து, தேசிங்கு ராஜா - ராணிபாய் நினைவாக இந்நகருக்கு ராணிப்பேட்டை என பெயரிடப்பட்டதாக வரலாறு.

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் ராஜா - ராணி நினைவுச் சின்னங்கள்அமைந்துள்ளன. இவா்களது நினைவுச் சின்னங்கள் புதா் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டன.

அவற்றைச் சீரமைத்து, பொதுமக்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மாவட்ட மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அடையாள சின்னங்களைப் புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, அவற்றைச் சீரமைக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, ராஜா தேசிங்கு- ராணி பாய் ஆகியோரின் 306-ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் சாா்பில், இந்த நினைவுச் சின்னங்களை மலா்களால் அலங்கரித்து, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், ரத்த தானம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.பவானி சிங், மாநில மகளிா் அணித் தலைவா் ஷோபா ராணி பாலாஜி சிங் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் ராஜா தேசிங்கு - ராணி பாய் வம்சா வழியினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com