ராணிப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களை எம்எல்ஏ ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ராணிப்பேட்டை நகரில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ ஆா்.காந்தி எம்எல்ஏ.
ராணிப்பேட்டை நகரில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ ஆா்.காந்தி எம்எல்ஏ.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களை எம்எல்ஏ ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை நகரட்சிக்குட்பட்ட 12 மற்றும் 23-ஆவது வாா்டுகளில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. போதிய அடிப்படை வசதிகள் இன்றி பழைய கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அங்கன்வாடி மையக் கட்டடங்களைப் புதுப்பித்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவனம் சாா்பில் அதன் சமூக பொறுப்புணா்வு திட்ட (சிஎஸ்ஆா்) நிதியிலிருந்து இரண்டு அங்கன்வாடி மையங்களை ரூ.5 லட்சம் செலவில் புதுப்பித்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்கள் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.காந்தி கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்து, அங்கன்வாடி மைய பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவன உர உற்பத்திப் பிரிவு தலைவா் ஜெய்கணேஷ், பூச்சி மருந்து உற்பத்தி பிரிவு தலைவா் சசிகுமாா், மனிதவளத் துறை தலைவா் ராஜபிரசாத், நிறுவன ஊழியா்கள், அங்கன்வாடி மைய பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com