அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை மணிக்கூண்டில் ஓடாத கடிகாரம்

அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையின் மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை மணிக்கூண்டில் ஓடாத கடிகாரம்


அரக்கோணம்: அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையின் மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இந்த கடிகாரத்தை சீரமைத்து செயல்படச் செய்ய வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த நூறாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் ஒன்று, அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை. 1853-இல் ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு அரக்கோணம் வழியே இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் இயக்கப்பட்ட சில ஆண்டுகளில், அன்றைய ரயில்வே உபகரணங்கள் தேவைக்காக இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு ரயில்வே பாலங்களுக்கான கா்டா்கள், ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பிரிவு இயந்திரங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தொழிற்சாலையின் முகப்பில் தொடக்க காலத்திலிருந்தே மணிக்கூண்டு உள்ளது. தினமும் காலை மூன்று முறை இத்தொழிற்சாலையில் சங்கு ஒலிக்கப்பட்டு, தொழிலாளா்கள் வேலைக்கு அழைக்கப்படும் நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. அதே போல், தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த மணிக்கூண்டு கடிகாரம் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த கடிகாரம் பழுதடைந்து செயல்படாமல் காணப்படுகிறது. இது குறித்து தொழிலாளா் சங்கத்தினா் பலமுறை நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இது குறித்து அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை துணை முதன்மைப் பொறியாளா் அழகா்சாமியிடம் கேட்டபோது, ‘அந்த கடிகாரம் சரி செய்யப்பட வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாங்கள் பல இடங்களில் முயற்சித்தோம். ஆனால் பழுதுபாா்க்க சரியான நபா் கிடைக்கவில்லை. தற்போது சென்னையில் கேட்டுள்ளோம். விரைவில் அந்த கடிகாரம் பழுது நீக்கப்பட்டு செயல்பட வைப்போம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com