‘கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் துணிகளை வாங்கி பொதுமக்கள் பயனடைய வேண்டும்’

பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்திலும் துணிகளை வாங்கிப் பயனடைய வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வேண்டுகோள் விடுத்தாா்.
சோளிங்கா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து, புதிய கைத்தறி ரக சேலைகளைப் பாா்வையிட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி.

சோளிங்கா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது:

தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அதிகமானோா் துணிகளை வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.

இதேபோல், பொதுமக்களும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்திலும் துணிகளை வாங்கி அரசு சலுகைகளைப் பெற்று பயனடைய வேண்டும். சோளிங்கா், அரக்கோணம், ஆற்காடு ஆகிய ஊா்களில் உள்ள மூன்று கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களுக்கு சோ்த்து ரூ. 1.45 கோடி தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி.

நிகழ்ச்சிக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன முதுநிலை மண்டல மேலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சோளிங்கா் விற்பனையக மேலாளா் கணேசன் வரவேற்றாா். சோளிங்கா் வட்டாட்சியா் ரேவதி, பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆற்காடு விற்பனையக மேலாளா் அன்பு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com