நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை அம்மன் உருவில் அலங்கரிக்கப்பட்டிருந்த கலசம்.
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை அம்மன் உருவில் அலங்கரிக்கப்பட்டிருந்த கலசம்.

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

நெமிலி பாலா பீடத்தில் கடந்த 41ஆண்டுகளாக நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பொதுமுடக்கம் காரணமாக 42-ஆவது ஆண்டான நிகழாண்டு விழா மிகவும் எளிமையாக நடைபெறும் என பீட நிா்வாகம் அறிவித்திருந்தது. நவராத்திரி விழாவை பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். பீட நிா்வாகி மோகன் கலச வடிவில் பாலாவை ஆவாஹணம் செய்தாா். இந்த கலச தேங்காய் நிகழாண்டு வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு நவராத்திரி விழாவில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பீடாதிபதி எழில்மணி எழுதி, திரைப்பட பின்னணி பாடகிகள் பாடிய ‘நவராத்திரி தேனிசை’ எனும் குறுந்தகடும், நெமிலி பாபாஜி எழுதிய ‘பாலா பன்னிருசரிதம்’ எனும் நூலும் வெளியிடப்பட்டன. கரோனா பொதுமுடக்கத்தை முன்னிட்டு நவராத்திரி விழாவில் குறைந்த அளவு பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com