கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோா்கள் இயற்கை மருத்துவ சிகிச்சையில் பூரண நலம்: ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவத் துறை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா்கள் இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து நலமுடன் இருப்பதாக மாவட்ட மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியோா்களிடம் நலம் விசாரிக்கும் மருத்துவக் குழுவினா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியோா்களிடம் நலம் விசாரிக்கும் மருத்துவக் குழுவினா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா்கள் இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து நலமுடன் இருப்பதாக மாவட்ட மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன், இயற்கை மற்றும் யோகா முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு அடுத்த கலவை காஞ்சி காமகோடி பீட முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் 30-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அவா்களுக்கு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கரோனா சிறப்புப் பிரிவில், ஆங்கில மருத்துவத்துடன் இணைந்து, இயற்கை முறை மற்றும் யோகா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அனைவரும் பூரண குணமடைந்தனா். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவப் பிரிவு மருத்துவா் சசிரேகா மற்றும் மருத்துவக் குழுவினா்கள் மூலம் நீராவி பிடித்தல், நறுமண சிகிச்சை, அக்குபிரஷா் சிகிச்சை, தியானம், யோகா, சிரிப்பு மற்றும் கைதட்டல் சிகிச்சை, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைக் குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவா்கள் அனைவரையும் ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ அலுவலா் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆகியோா் முதியோா் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, கலவை காஞ்சி காமகோடி பீட ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள முதியோா்களுக்கு நேச்சுரோபதி மற்றும் யோகா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட 70 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com