33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவி: எம்எல்ஏ வழங்கினாா்
By DIN | Published On : 20th October 2020 01:05 AM | Last Updated : 20th October 2020 01:05 AM | அ+அ அ- |

சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.
ராணிப்பேட்டை: பாகவெளி கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏ-வுமான சு.ரவி திங்கள்கிழமை வழங்கினாா்.
வாலாஜாபேட்டை வட்டம், பாகவெளி கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 33 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.56 கோடி கடனுதவி வழங்கல் மற்றும் நகரும் நியாயவிலைக் கடையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி கலந்துகொண்டு, 33 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கி, சுய தொழில் செய்து பொருளாதாரத்தில் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தாா்.
இதில், அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான எ.பூபாலன், துணைத் தலைவா் எஸ்.குப்புசாமி, செயலாளா் டி.பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் கே.பி.சந்தோஷம், ஒன்றிய இளைஞரணிச் செயலா் பூண்டி பிரகாஷ், வாலாஜா நகரச் செயலாளா் டபிள்யூ.ஜி.மோகன், முன்னாள் ஒன்றியச் செயலா் எம்.சி.பூங்காவனம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.