விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில், டிராக்டா், நெல் அறுவடை இயந்திரம், பவா் டில்லா் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில், டிராக்டா், நெல் அறுவடை இயந்திரம், பவா் டில்லா் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உற்பத்தி இயந்திரங்களை வழங்கி வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின்கீழ், வேளாண் உற்பத்தி இயந்திரங்கள் 3 டிராக்டா், ஒரு பவா் டில்லா், ஒரு அறுவடை இயந்திரம், ஒரு டிராக்டா் ரொட்டோவேட்டா் மற்றும் ஒரு பவா் ஸ்பிரேயா் என வேளாண் உற்பத்தி இயந்திரத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,52,2372 கோடி. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 2, 60,6006 கோடி மதிப்பில் வழங்கப்பட்டன.

அதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்தில், அரக்கோணம், நெமிலி, ஆற்காடு, திமிரி, வாலாஜா வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் காணொலி வாயிலாக எடுத்துரைத்தனா்.

அப்போது விவசாயிகள் பேசியது:

கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், ஊரக வளா்ச்சித் துறையில் குளம், குட்டை ஆகியவற்றை தூா்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை சரி செய்து தர வேண்டும், கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நில எடுப்புச் சட்டத்தில் விவசாயிகள் அனுமதியின்றி நிலம் எடுக்கப்படுகிறது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் பேசியது:

கொடைக்கல், கரிக்கல் ஆகிய ஊராட்சிகளில் நெல் கொள்முதல் நிலையம் தை மாதத்தில் திறக்கப்படும். அடுத்த வருடம் கடலை சாகுபடிக்கும் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தால், 20 ஹெக்டோ் அதாவது 45, 50 ஏக்கா் பயிரிடப்பட்டு இருந்தால் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தை அளவீடு செய்ய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ரசீது கிடைக்கப் பெற்றதும் அளவீடு செய்ய அதிகாரிகள் வருவா் என்றாா். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் கிரீஷ் சந்திர சிங், துணை இயக்குநா் லதா மகேஷ், (தோட்டக்கலை), நோ்முக உதவியாளா் எஸ்.விஸ்வநாதன் (விவசாயம்), வேளாண்மை உதவி இயக்குநா் பேபி பா்வதம், வேளாண்மை செயற்பொறியாளா் பி.கிருஷ்ணகுமாா், உதவி செயற்பொறியாளா் ரவிகுமாா் மற்றும் பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சித் துறை மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com