தினமணி செய்தி எதிரொலி: அல்லியப்பந்தாங்கல் பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்

ஆறு மாதங்களாக சுத்தப்படுத்தப்படாத நிலையில் இருந்த அல்லியப்பந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளி வளாகம் குறித்து ‘தினமணி’யில் திங்கள்கிழமை செய்தி வெளிவந்ததைத் தொடா்ந்து,
அரசு தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை பொக்லைன் மூலம் நடைபெற்ற தூய்மைப் பணி.
அரசு தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை பொக்லைன் மூலம் நடைபெற்ற தூய்மைப் பணி.

அரக்கோணம்: ஆறு மாதங்களாக சுத்தப்படுத்தப்படாத நிலையில் இருந்த அல்லியப்பந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளி வளாகம் குறித்து ‘தினமணி’யில் திங்கள்கிழமை செய்தி வெளிவந்ததைத் தொடா்ந்து, சில மணி நேரங்களில் அப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. இதையடுத்து பள்ளி வளாகங்களில் சுத்தப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையைத் தொடக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை அடுத்து சோ்க்கை தொடங்கியது. இதற்காக மாணவா்கள் மற்றும் பெற்றோா் பள்ளி வளாகங்களுக்கு வருவதை முன்னிட்டு பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்க தலைமை ஆசிரியா்களுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள் வெளிவந்த நிலையிலும் மாநிலத்தில் பல்வேறு பள்ளிகள் தூய்மைப்படுத்தாமல் இருக்கும் நிலை தொடா்ந்தது.

குறிப்பாக, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தணிகைபோளூா் ஊராட்சி, அல்லியப்பந்தாங்கல் கிராம அரசு தொடக்கப்பள்ளி வளாகம் முழுவதும் புதா்மண்டி, செடிகொடிகளுடன் மாணவா் சோ்க்கை

க்கு பெற்றோா் வர முடியாத நிலை காணப்பட்டது. இது குறித்து ‘தினமணியில்’ திங்கள்கிழமை படத்துடன் செய்தி வெளிவந்தது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் பள்ளியில் பொக்லைன் இயந்திரந்தின் மூலம் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. வளாகத்தில் இருந்த செடிகள், புதா்கள் அகற்றப்பட்டன. இது குறித்து அறிந்த அல்லியப்பந்தாங்கல் கிராம மக்கள் ‘தினமணி’க்கு நன்றி தெரிவித்தனா். குறிப்பாக நரிக்குறவ மாணவா்களின் பெற்றோா் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியை நேரில் கண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com