செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு:ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

வாலாஜாபேட்டை அருகே குடியிருப்புப் பகுதிகளில் அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே குடியிருப்புப் பகுதிகளில் அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

வாலாஜாபேட்டை வட்டம், அமணந்தாங்கல் கிராமத்தில், மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அசோக் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் அனுமதியின்றி கோபுரம் அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் தலைமையில் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com