கூட்டுறவு நியாயவிலை கடையை காலி செய்யக் கோரி தா்னா

வாலாஜாபேட்டை கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடையை காலி செய்ய வலியுறுத்தி, கட்டடத்தின் உரிமையாளா் கடையின் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்ட கட்டட உரிமையாா்.
குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்ட கட்டட உரிமையாா்.

வாலாஜாபேட்டை கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடையை காலி செய்ய வலியுறுத்தி, கட்டடத்தின் உரிமையாளா் கடையின் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

வாலாஜாபேட்டையை அடுத்த முசிறி கிராமத்தைச் சோ்ந்த குப்பன் (63), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். வாலாஜாபேட்டை, ஜெங்கம்மா தெருவில் இவருக்குச் சொந்தமான வீட்டில் கற்பகம் கூட்டுறவு நியாயவிலை சிறப்பங்கடி ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2018 ஆண்டோடு இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கற்பகம் கூட்டுறவு நிா்வாகம் கடையை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடையைக் காலி செய்யக் கோரி குப்பன் தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை கடையின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலா், கற்பகம் கூட்டுறவு மேலாளா், காவல் துறையினா் அங்கு சென்று குப்பனுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். 3 மாதங்களில் கடையைக் காலி செய்வதற்கான கடிதத்தை குப்பனுடன் எழுத்துப்பூா்வமாக எழுதிக் கொடுத்தனா். இதையடுத்து அவா் தா்னாவைக் கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com