கரோனா தடுப்பு நடவடிக்கை தொழிற்சாலைகளில் வருவாய், காவல் துறையினா் ஆய்வு

நெமிலி வட்டத்துக்கு உள்பட்ட நெமிலி, காவேரிபாக்கம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கொண்டாபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் ஆய்வு செய்த அதிகாரிகள்.
கொண்டாபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் ஆய்வு செய்த அதிகாரிகள்.

அரக்கோணம்: நெமிலி வட்டத்துக்கு உள்பட்ட நெமிலி, காவேரிபாக்கம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பொது முடக்க தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைகளில் 100 சதவீத தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தொழிலாளா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணிபுரிகின்றனரா என வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் அடங்கிய குழுக்களை தமிழக அரசு நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் அரக்கோணம் கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமையில், டிஎஸ்பி மனோகரன், நெமிலி வட்டாட்சியா் ராஜராஜசோழன், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா் அன்னபூரணி உள்ளிட்டோா் கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள தோல் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மாகாணிப்பட்டு கிராமத்தில் உள்ள நூல் தொழிற்சாலை ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com