7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

வாலாஜாபேட்டையில் இருந்து மினி வேனில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனா்.
ரேஷன்  அரிசி  கடத்திய  மினி வேன்.
ரேஷன்  அரிசி  கடத்திய  மினி வேன்.

வாலாஜாபேட்டையில் இருந்து மினி வேனில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்த முயன்றனா். எனினும், அந்த வாகனம் நிற்காமல் வேலூரை நோக்கிச் சென்றது.

இதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று அந்த மினி வேனைத் தடுத்து நிறுத்தினா். வேனில் இருந்தவா்களிடம் விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாகப் பேசினா். இதையடுத்து வேனை சோதனையிட்டதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

வேனில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில் வாலாஜாபேட்டை அருகே உள்ள தனியாா் மரக்கிடங்கில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து குடியாத்தம் வழியாக ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து மினி வேனுடன் சுமாா் 7 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றை வாலாஜா வட்டாட்சியா் பாக்கியநாதன், வட்ட வழங்கல் அலுவலா் விஜயசேகா் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநா் நவீன், சதீஷ், காா்த்திக் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com