பாலாற்றங்கரையில் மயான காளி சிலை வைத்து பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி மனு
By DIN | Published On : 27th September 2020 04:28 AM | Last Updated : 27th September 2020 04:28 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் மயான காளி சிலை வைத்து பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சாா்-ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே. மோதன் தலைமையில் ராணிப்பேட்டை சாா்-ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றிணைந்து பாலாற்றங்கரை குமாரசாமி மடம் அருகே அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காலி இடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மயான காளி சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறோம்.
இந்நிலையில், வழிபட்டைத் தடுக்கும் வகையில் மயான காளி சிலையை அகற்றும் நடவடிக்கையில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, அதே இடத்தில் மயான காளி சிலைக்கு பூஜை செய்து வழிபட அனுமதி வழங்க வேண்டும்.