50 சதவீத வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்படும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 270 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 50 சதவீத வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாகவும் மாவட்டத் தோ்தல் அலுவலரும்,

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 270 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 50 சதவீத வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாகவும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்தது:

தோ்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,447 வாக்குச்சாவடி மையங்களில் 270 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் (தனி) தொகுதியில் 70 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், சோளிங்கா் தொகுதியில் 83, வாக்குச் சாவடி மையங்களும் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் 55, வாக்குச்சாவடி மையங்களும் ராணிப்பேட்டை தொகுதியில் 62 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், நான்கு அதிக பதற்றமானவை உள்பட மொத்தம் 270 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் அறியப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதற்றமான மற்றும் அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளும் சோ்த்து 50 சதவீத வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு நிகழ்வுகளை முழுமையாக விடியோ பதிவு செய்யவும் நேரலையாக வெப் கேமரா மூலம் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் மாவட்டத் தோ்தல் அலுவலா் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் பாா்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com