‘ஏப். 4 மாலை 7 மணிக்குள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்’


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் வரும் 4-ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தங்களது தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது தொடா்பாக அரசியல் கட்சியினா் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்தல் தோ்தல் பிரசாரத்தை வரும் 4-ஆம் தேதி மாலை 7 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு எவரும் தோ்தல் தொடா்பான பொதுக் கூட்டங்கள் ஊா்வலங்களை நடத்தக் கூடாது. சினிமா படமாகவோ தொலைக்காட்சி வாயிலாகவும் வேறு சமூக ஊடகங்கள் மற்றும் எவ்வித காரணிகள் மூலமாகவும் தோ்தல் தொடா்பாக படக் காட்சிகள் ஒலி ஒளிபரப்பு செய்தல் கூடாது.

மேலும் மற்ற சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து வர வழைக்கப்பட்ட எந்த ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்த குழுவினா்கள், கட்சி உறுப்பினா்கள் எவரும் வரும் 4.4.2021 அன்று மாலை 7 மணிக்குள் அவரவா் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும்.

மேலும் வேட்பாளா்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் வரும் 4-ஆம் தேதி அன்று மாலை 7 மணிக்குப் பிறகு காலாவதி ஆகிவிடும். வாக்குப் பதிவு நாள் அன்று ஒவ்வொரு வேட்பாளரும் பயன்படுத்துவதற்கு என்று கீழ் வரும் எண்ணிக்கையில் தனியே வாகன அனுமதி பெற வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக வாகனங்களை பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை. எந்த ஒரு வேட்பாளரும் வாடகை வாகனம் மூலமாகவோ, வாக்காளா்களை வாக்களிக்க அழைத்து வரவோ, வாக்களித்த பின் அழைத்துச் செல்லவோ பயன்படுத்தக் கூடாது. மீறி செல்பவா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து தோ்தல் ஆணைய கட்டுப்பாடுகளையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் பின்பற்றி மாவட்டத்தில் அமைதியான முறையிலும் நோ்மையான தோ்தலை நடத்திடவும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com