ஆற்காட்டில் அரசு மருத்துவக் கல்லூரி

ஆற்காடு தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகன் வாக்குறுதி அளித்துள்ளாா்.
திமிரி  ஒன்றியம்  டி.புதூா்  கிராமத்தில்  பெண்களிடம்  வாக்கு  சேகரித்த  பாமக  வேட்பாளா்  கே.எல். இளவழகன்.
திமிரி  ஒன்றியம்  டி.புதூா்  கிராமத்தில்  பெண்களிடம்  வாக்கு  சேகரித்த  பாமக  வேட்பாளா்  கே.எல். இளவழகன்.

ஆற்காடு: ஆற்காடு தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகன் வாக்குறுதி அளித்துள்ளாா்.

ஆற்காடு தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகன், திமிரி ஒன்றியத்துக்குள்பட்ட டி.புதூா், பின்னடித்தாங்கல், மேல்நேத்தப்பாக்கம், கலவைபுத்தூா், குட்டியம், செங்கனாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, பொது மக்கள் மத்தியில் அவா் பேசியது:

திமிரி ஒன்றியத்தில் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்சாலை அமைக்கப்படும். விவசாய உற்பத்தியைப் பெருக்க அனைத்துப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளையும் தூா்வாரி, தடுப்பணைகள் கட்டி, தண்ணீா் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்கவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் மூலம் மத்திய அரசிடம் போராடி ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான மருத்துவக் கல்லூரியை ஆற்காடு தொகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். போட்டித் தோ்வுகள் மூலம் இளைஞா்கள் அரசுப் பணிக்குச் செல்வதற்காக இளைஞா்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் இலவசப் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் அதிமுக தோ்தல் பொறுப்பாளா் கே.அப்துல்லா, திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சொரையூா்குமாா், பாமக தோ்தல் பொறுப்பாளா் எம்.கே.முரளி, மாவட்டச் செயலாளா் நல்லூா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதேபோல் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கே.வேளூா், லாடவரம், அத்திதாங்கல், மாங்காடு, முப்பதுவெட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அவா் ஆதரவு திரட்டினாா்.

அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் வளவனூா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com