முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
கலவை காரீசநாதா் கோயில் பிரமோற்சவம் நிறைவு விழா
By DIN | Published On : 04th April 2021 07:31 AM | Last Updated : 04th April 2021 07:31 AM | அ+அ அ- |

யோகசாம்பசிவ சதாசிவ அலங்காரத்தில் கலவை ஸ்ரீகாரீசநாதா்.
ஆற்காட்டை அடுத்த கலவையில் உள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீகாரீசநாதா் கோயிலில் நடைபெற்ற 10 நாள் பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
கலவை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தா்மசம்வா்த்தினி சமேத காரீசநாதா் கோயிலில் பங்குனி உத்தர பிரமோற்சவம் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், மாலை பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூா்த்திகள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆவது நாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவா் பவனி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பிரம்மோற்சவத்தின் நிறைவாக 10- வது நாளன்று யோகசாம்பசிவ சதாசிவ சிறப்பு அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் விழாக் குழுவினா் சாா்பில் உபயதாரா்கள் கௌரவிக்கப்பட்டனா்.