போலிச்சான்றிதழ் புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு 

மின்னல் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக வந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்த அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
போலிச்சான்றிதழ் புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு 

மின்னல் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக வந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்த அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இதே புகாரில் ஏற்கனவே ஒரு ஆசிரியையை நெமிலி போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஒச்சேரி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 28.07.1999 அன்று ராணிப்பேட்டை, நவல்பூரைச் சேர்ந்த ஷோபனா என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தற்போது ஷோபனா, பதவி உயர்வு பெற்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை ஷோபனாவின் மேல்நிலை கல்வி சான்றிதழ்கள் உண்மைதன்மை அறிவதற்காக தமிழக அரசின் தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டதில், அந்த சான்றிதழ்கள் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டவை அல்ல என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்தது. இதையடுத்து இவர் மீது அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா, அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை ஷோபனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இப்புகார் மீது வழக்கு பதிந்த போலீசார், மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஷோபனாவை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நெமிலி ஊராட்சி ஒன்றியம் பருத்திபுத்தூர், அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஜெபமணி என்பவர் போலிசான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டு கல்விஅலுவலர்களின் உத்தரவின் பேரில் ஆசிரியை ஜெபமணி, பள்ளி தாளாளரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

அவர் மீது நெமிலி போலீசில் வட்டார கல்வி அலுவலர் அளித்த புகாரில் வழக்குபதிந்து ஆசிரியை ஜெபமணியை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com