ஒரு வாரத்தில் அரக்கோணத்தில் 300 பேருக்கு தொற்று

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரக்கோணத்தில் 300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் பல்வேறு இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வாரத்தில் அரக்கோணத்தில் 300 பேருக்கு தொற்று

அரக்கோணம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரக்கோணத்தில் 300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் பல்வேறு இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனாவின் இரண்டாவது அலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரக்கோணத்தில் மட்டும் கடந்த புதன்கிழமை முதல் ஒரு வாரத்தில் 300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அரக்கோணத்தில் 300 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாதிக்கப்படுவோரின் பலா் அரசு மருத்துவமனைகளிலும், பலா் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள தனியாா் கல்லூரிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனா். சிலா் தனியாா் மருத்துவமனையில் சோ்ந்துக் கொள்கின்றனா். ஒரே வீட்டில் 4 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்த வீடு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. நகராட்சிக்குட்பட்ட சுப்பராயன் தெரு, காந்திநகரில் அவில்தாா் முனுசாமி குறுக்குதெரு, நேருஜிநகரில் சில வீடுகள் உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த வீட்டில் முன் அறிவிப்பு வைக்கப்படுகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் இணைந்து தெரிவித்ததாவது,.

பாதிக்கப்பட்டோரின் வீடு அமைந்துள்ள பகுதி மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் அதிக அளவில் தெளிக்கப்பட்டு அப்பகுதியில் சுகாதார கண்காணிப்பு அதிகரிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில் உடன் வசித்தோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் வீடுகள் இருக்கும் பகுதிகளில் அனைவருக்கும் கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. நகரில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெறுகிறது என்றனா் நகராட்சி ஆணையா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com