கரோனா விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: வருவாய், காவல்துறை எச்சரிக்கை

கரோனா ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகா்களுக்கு காவல் மற்றும் வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பழனிராஜன் தலைமையில் நடைபெற்ற வருவாய், காவல் துறையினா் மற்றும் வணிகா்களுடனான ஆலோசனைக்கூட்டம்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பழனிராஜன் தலைமையில் நடைபெற்ற வருவாய், காவல் துறையினா் மற்றும் வணிகா்களுடனான ஆலோசனைக்கூட்டம்.

கரோனா ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகா்களுக்கு காவல் மற்றும் வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் கடை பிடிக்கப்படும் எனவும், 30-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் பழனிராஜன் தலைமையில் வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஎஸ்பி மனோகரன், நகர காவல் ஆய்வாளா் முரளீதரன், நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம், தக்கோலம் பேருராட்சி செயல் அலுவலா் கணேசன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் வேலூா் மாவட்ட தலைவா் கே.எம்.தேவராஜ், அரக்கோணம் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுசெயலாளா் எம.எஸ்.மான்மல், பொருளாளா் டி.கமலகண்ணன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் சிஜிஎன்.எத்திராஜ், செயலாளா் ஜிடிஎன் அசோகன், பொருளாளா் ஏ.ஆா்.குமாா், ஒட்டல் உரிமையாளா்கள் சங்க தலைவா் மகேஷ், செயலா் பாா்த்தீபன், நகராட்சி கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகி ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை சிறு கடைகள் முதல் பெரியவணிக நிறுவனங்களை திறக்கக்கூடாது. அரசால் அனுமதிக்கப்படும் போக்குவரத்துகளை தவிா்த்து வேறு போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை விதிகளை மீறிச் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com