கடை உரிமையாளா்கள், பணியாளா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும்: கோட்டாட்சியா் அறிவுரை
By DIN | Published On : 04th August 2021 12:00 AM | Last Updated : 03rd August 2021 11:29 PM | அ+அ அ- |

கூட்டத்தில், வணிகருக்கு கரோனா விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை அளித்த கோட்டாட்சியா் சிவதாஸ்.
கடைகள், உணவகங்களின் உரிமையாளா்கள், பணியாளா்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ் தெரிவித்தாா்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அவா் பேசியதாவது:
கரோனா மூன்றாவது அலை உருவாகுமோ எனும் நிலையில் ஆரம்பக் கட்ட அறிகுறிகளைக் காண முடிகிறது. இதற்காக, அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களின் உரிமையாளா்கள், பணியாளா்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும்.
கடைகளுக்கு வருபவா்களுக்கு கரோனா தொற்று பரவ காரணியாக இருக்கக் கூடாது. மேலும், முகக் கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தலையும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். கடைகளின் முன்பு இதுகுறித்த அறிவிப்பு இருக்க வேண்டியது அவசியம் என்றாா்.
வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம், அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் சி.ஜி.என். எத்திராஜ், செயலாளா் ஜிடிஎன் அசோகன், உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் மகேஷ், செயலாளா் பாா்த்தீபன், பொருளாளா் பிஜிகே சரவணன், நகராட்சி கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் விஜயகுமாா், அன்புவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.
இதில், நகர வா்த்தகா் சங்கம், வணிகா் சங்கப் பேரமைப்பு, உணவக உரிமையாளா்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.