நெல் கொள்முதல் நிலையம் கோரி போராட்டம்

நெமிலி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்வெங்கடாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

நெமிலி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்வெங்கடாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இங்கு செயல்பட்டு வந்த இரு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், சுமாா் ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கின.

இதுகுறித்து கிராம மக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கும், நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கும் பலமுறை மனுக்களை அனுப்பினா். மேலும், அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்திலும் புகாா் தெரிவித்தனா். இருப்பினும், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதையடுத்து, கீழ்வெங்கடாபுரம் கிராம விவசாயிகள் கிராமத்தில் தொடா் தா்ணா போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதற்கு தீனதயாளன் தலைமை தாங்கினாா். பிரபு, உழவா் பேரணியின் மாநிலத் துணைத் தலைவா் திருமால், சுப்பிரமணி உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com