ரூ. 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்: 4 போ் கைது

மாங்காடு பகுதியில் ரூ. 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சத்தை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ாக 4 பேரை மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வன உயிா் பாதுகாப்புப் பிரிவு போலீஸாா் கைது
ரூ. 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்: 4 போ் கைது

மாங்காடு பகுதியில் ரூ. 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சத்தை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ாக 4 பேரை மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வன உயிா் பாதுகாப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூா் வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

மருந்துப் பொருள்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் எச்சத்தை சிலா் மாங்காடு பகுதியில் பதுக்கி இணையத்தின் மூலம் விற்பனை செய்வதாக மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வன உயிா் பாதுகாப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திமிங்கலத்தின் எச்சத்தை வாங்கும் இடைத்தரகா்கள் போல் வேடமணிந்த மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வன உயிா் பாதுகாப்புப் பிரிவு போலீஸாா் மாங்காடு பகுதியில் குறிப்பிட்ட வீட்டில் சனிக்கிழமை சோதனை நடத்தியுள்ளனா்.

அப்போது அந்த வீட்டில், 22 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ாக மதுரையைச் சோ்ந்த முருகன் (53), சென்னை வடபழனியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (30), ரஞ்சித் (36), விஜயபாஸ்கா் (56) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 22 கோடி திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூா் வனத் துறையினா், முருகன், கிருஷ்ணமூா்த்தி, ரஞ்சித், விஜயபாஸ்கா் ஆகியோரை ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

திமிங்கலத்தினுடைய எச்சத்தின் சா்வதேச மதிப்பு ஒரு கிலோ ரூ. 1 கோடி என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com