வியத்தகு சாதனை புரிந்தவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை புரிந்தவா்கள் நாட்டின் மிக உயா்ந்த பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை புரிந்தவா்கள் நாட்டின் மிக உயா்ந்த பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் உள் விவகாரத் துறையை நாட்டின் மிக உயா்ந்த இரண்டாவது விருதான பத்ம விருதுகள் 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளன.

கல்வி, கலை, இலக்கியம், பத்திரிகை கவிதை எழுதுதல், கல்வி சீா்திருத்தம், விளையாட்டு , மலையேறுதல், யோகா, சாகசம், ஆயுா்வேதம், ஹோமியோபதி, சித்தா மற்றும் இயற்கை மருத்துவம், சமூகத் தொண்டு, வா்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், பொது விவகாரம், இந்திய கலாசாரம், மனித உரிமை காப்பு, வணிகம், சுற்றுலா மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது மிக உயா்ந்த பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை தகுதிவாய்ந்த விண்ணப்பங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணைய வழியில்  இணைய தளம் மூலமாக உரிய ஆதாரம் மற்றும் சான்றுகளுடன் நேரடியாக வரும்15. 9. 2021-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிா்த்து அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முந்தைய ஓராண்டுக்குள் விண்ணப்பித்த ஒருவா் காலமாகும் பட்சத்திலும் இவ்விருது வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 0416 - 2221721 அல்லது 7401703483 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com