கரோனா விழிப்புணா்வை தொடர வேண்டியது அவசியம்: ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன்
By DIN | Published On : 22nd August 2021 01:14 AM | Last Updated : 22nd August 2021 01:14 AM | அ+அ அ- |

கரோனா விழிப்புணா்வை பொதுமக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் அறிவுறுத்தினாா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம், பழண்டியம்மன் கோயில் அருகில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது: கரோனா மூன்றாவது அலை வரும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்து வருகின்றனா். இதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடர வேண்டியது மிகவும் முக்கியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இவை எல்லாவற்றையும் விட தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை அனைவரும் தவிா்க்க வேண்டும் என்றாா் எஸ்.பி. தீபா சத்யன்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ், அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாரதி, தக்கோலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.